Psoriasis

சோரியாசிஸ் என்னும் காளாஞ்சகப்படைக்கு எண்ணெய் மருத்துவம், மூலிகைக் கரி பூசுதல், மூலிகைப் புகை மூலம் சிகிச்சை:
சோரியாசிஸ் என்பது தோலில் சிவந்த செதில் போன்ற திட்டுக்களை தோற்றுவிக்கும் ஒரு தோல் நோயாகும். இது யாருக்கும் பரவாது. தோல் மற்றும் மூட்டுகளை பாதிக்கும். நாட்பட்ட நிலையில் சரவாங்கி வாதத்தை உருவாக்கும்.
நம் இந்தியாவில் மட்டும் 60 முதல் 70 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயைப் பற்றியும் இதற்கான தீர்வைப் பற்றியும் பொள்ளாச்சி ஆனைமலை ரோடு சித்தா ஸ்கின் கேர் சென்டர் மருத்துவர் டாக்டர்.மாரிராஜ் BSMS அவர்கள் கூறியதாவது:-
சோரியாசிஸ் என்பது மூலிகை மருத்துவமான பாரம்பரிய சித்த மருத்துவத்தில் காளாஞ்சகப்படை என்றும் காளஞ்சக வாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
இது தலையில் பொடுகு போல் வருவது, உடல் முழுவதும் புள்ளி புள்ளியாக வருவது, நகத்தில் வருவது, உள்ளங்கை உள்ளங்காலில் வெடிப்பு வெடிப்பாக வருவது என பல வகைப்படும்.
இது ஒரு Auto Immune Disorder ஆகும். தன் உடல் தன்னையே பாதிக்கும் ஒரு நோயாகும். நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியானது நமது தோலையே ஒரு கிருமி போல பாவித்து அதை அதிகப்படியாக வெளியேற்றுகிறது. இப்படி அதிகமாக தோல் வளர்ந்து உதிர்வதால் மேலும் மேலும் படிந்து ஒரு அடுக்கு போல் உருவாகிறது.
சாதாரணமாக நமக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை தோல் உதிர்ந்து புதியதாக முளைக்கும். ஆனால் சோரியாசிஸில் மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தோல் உதிர்ந்து மீண்டும் மீண்டும் வளர்வதால் தோலின் மேல் ஒரு படலம் போல் உருவாகும்.
தன் உடலையே தாக்கும் இந்த அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க நவீன மருத்துவத்தில் மருந்துகள் வழங்கப்படுகிறது. இதற்கு புற்றுநோய்க்கான மருந்துகளை வாரத்திற்கு ஒரு முறை வழங்குகின்றனர். ஸ்டீராய்டு மருந்துகளையும் வழங்குகின்றனர்.
சோரியாசிஸ் நோயால் ஏற்படும் பாதிப்புகளை விட அதற்காக உட்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகளால் ஏற்படும் பாதிப்பே மிக அதிகம். இவ்வாறு அதிக பக்கவிளைவுகளை கொண்ட மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டாலும் திரும்பத் திரும்ப வருவது இந்த நோயின் இயல்பாகும்.
நமது மூலிகை மருத்துவத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கக் கூடிய மருந்துகள், ஸ்டீராய்டு மருந்துகள் கிடையாது. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தியை சரியான முறையில் திருப்பிவிடும் Immuno Modulator மருந்துகள் உள்ளன.
பழங்காலத்தில் தோல் நோய்களுக்கும் இதுபோல் Auto Immune Disorderகளுக்கும் மூலிகை எண்ணெயை மருந்தாகக் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி வைத்திருந்தனர். மேலும் மூலிகைக் கரியினை பாதிக்கப்பட்ட சருமத்தில் பூசுதல், மூலிகைப் புகையில் உட்காரவைத்தல் ஆகிய முறைகளில் தோல் நோய்களுக்கு முற்றிலுமாக தீர்வு சொல்லியுள்ளனர்.
இந்த மருத்துவத்தை திரும்ப பழையபடி கொண்டு வந்து குடிக்கும் எண்ணெய் வகைகள், மூலிகைக் கரி பூசுதல், ஆளுயரக் குழிக்குள் தலை மட்டும் வெளி தெரியும்படி மூலிகைப் புகையில் உட்காரவைத்தல் ஆகிய சிகிச்சைகள் மூலம் சோரியாசிஸ் நோயை முற்றிலும் திரும்ப வராமல் செய்வதற்கு வழிவகை செய்கிறோம். மேலும் தோலில் ஏற்படும் கரப்பான், படை, கரும்படை, கரும்புள்ளி, வெண்புள்ளி,பருக்கள், வேனல் கட்டிகள் ஆகிய தோல் நோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது.
சோரியாசிஸ் நோயை முழுவதுமாக குணப்படுத்த சித்தா ஸ்கின் கேர் சென்டர் தலைமை மருத்துவர் டாக்டர்.பா.மாரிராஜ் அவர்களின் சிகிச்சையை பெற நேரில் ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்படுகிறது.
மூலிகைக் கரி குளியல்

மூலிகைக் கரியின் (ஹெர்பல் சார்க்கோல்) பயன்பாடுகள்& Skin Detoxificationல் அதன் பங்கு:
பல் தேய்க்க கரித்தூளா? என்ற கேள்வி போய் தற்போது முகம் மற்றும் உடலுக்கு கரித்தூள் பயன்படுத்தும் நிலை அதிகரித்துள்ளது. இன்றைய தலைமுறையினர் விழிப்புணர்வுடன் உள்ளனர்.
கரித்தூள் சருமத்துளையில் இருக்கும் அழுக்கை வெளியேற்றி சருமத்தை சுத்தம் செய்கிறது. சமீப காலங்களில் கரித்தூள் என்னும் சார்க்கோல் பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஆக்டிவேட்டட் சார்க்கோல் என்பது சாதாரண கரித்தூளின் பண்பினை மேம்படுத்த மேலும் வெப்பத்தில் வைத்து அதன் வேதிப்பொருட்களை அதிகரிப்பதன் மூலம் பெறப்படுகிறது.
இது சருமத்துக்கு பொலிவு தருகிறது. சருமத்தில் மூன்று அடுக்குகள் வரை ஊடுருவி உள் இருக்கும் அழுக்கை உறிஞ்சுகிறது. சருமத்தில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களில் உருவாகும் அதிகப்படியான இறந்த செல்களை (டெட் ஸ்கின்ஸ்) முழுவதுமாக வெளியேற்றி தோலின் ஆரோக்கியத்தை மீட்டுக் கொண்டு வருகிறது.
நமது சருமத்தில் வேதிப்பொருட்கள் அடங்கிய க்ரீம் போன்றவற்றை பயன்படுத்தும் போது அவை சருமத்துக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி சருமத்தை பாதிக்கும்.
ஆனால் நமது ஹெர்பல் சார்க்கோல் பயன்பாடு சருமத்திலுள்ள அழுக்கை வெளியேற்றி சருமத் துவாரத்தை சுருங்கச் செய்யும். மேலும் தோலில் உள்ள அதிகப்படியான எண்ணையை உறிஞ்சிக்கொள்ளும்.
முகத்தில் வரும் கரும்புள்ளி, வெண்புள்ளி, பருக்கள் மற்றும் வேனில் கட்டிகள் போன்றவை சருமத்தின் அடியில் தங்கியிருக்கும் பாக்டீரியா தொற்றால் வரும். இவற்றை நீக்க மூலிகை சார்க்கோல் உதவுகிறது. சருமத்தின் நிறத்தையும் அதிகப்படுத்துகிறது.
மூலிகைக் கரியினை உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் கழித்து குளிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் தோலின் மூலம் வெளியேறுகிறது. குறிப்பாக ஆக்டிவேட்டட் சார்க்கோல் எனப்படும் மேம்படுத்தப்பட்ட கரித்தூளானது இதற்கு பயன்படுகிறது.
தற்போது இந்த ஆக்டிவேட் சார்கோல் சோப்பு வகைகள் வாசனை திரவியங்கள் ஷாம்பு வகைகளில் சேர்க்கப்படும் முக்கிய பொருளாக உள்ளது. குறிப்பாக இது தோலின் மீது அலர்ஜி அல்லது எரிச்சல் ஏற்படுத்துவதில்லை.
Alpha hydroxy Acid, Beta hydroxy Acid, Salicylic Acid போன்றவற்றை போலவே தோலில் உள்ள நச்சுகளை அகற்றி Skin Detoxification செய்ய இந்த கரிக் குளியல் பயன்படுகிறது.
பழங்காலத்தில் அரசு குடும்பங்களிலும் இந்த மண் குளியல், மூலிகைக் கரிக் குளியல் முதலியவை பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
மீண்டும் நாம் நம் முன்னோர்கள் காட்டிய வழிமுறைப்படி மூலிகைக் கரி பூசி குளித்தலின் மூலம் நமது உடலின் நச்சுத்தன்மையை முழுமையாக தோலின் வழியே Skin Detox செய்து தோலின் ஆரோக்கியத்தை மீட்டெடுப்போம்.
தோலின் ஆரோக்கியம் என்பது தினமும் சோப்பு போட்டு குளித்தல், தலைக்கு ஷாம்பு போட்டு குளித்தல் என்பது மட்டும் அல்ல என்பதை உணர்வோம்.
பழங்கால மூலிகைப் புகை சிகிச்சை

மூலிகைக் கரியின் (ஹெர்பல் சார்க்கோல்) பயன்பாடுகள்& Skin Detoxificationல் அதன் பங்கு:
மூலிகைப் புகை சிகிச்சை என்பது ஒன்றும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. நமது சித்தர்கள் பழங்காலத்திலேயே ஆராய்ந்து தோல் வியாதிகளுக்கென கண்டறிந்த ஒரு சிகிச்சை முறை தான்.
இது பழங்காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. கரப்பான், சோரியாசிஸ், படை, கரும்படை, உடலில் ஏற்படும் வெண்புள்ளி மற்றும் கரும்புள்ளி, காணாக்கடி போன்ற பல்வேறு தோல் வியாதிகளுக்கும் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஆளுயர குழிக்குள் தலை மட்டும் வெளியே தெரியும்படி அமரவைத்து வெளி பக்கத்திலிருந்து மூலிகைக் குச்சிகளை எரித்து அதிலிருந்து வரும் புகை மட்டும் இளஞ்சூடான நிலையில் ஒரு சிறு குழாய் மூலமாக அந்த குழிக்குள் செலுத்தப்படுகிறது.
இவ்வாறு செய்வதால் தோலிலுள்ள துவாரங்களின் வழியே உடலின் நச்சுக்கள் அனைத்தும் (Skin detox) வியர்வை மூலம்வெளியேறுகிறது. இந்த சிகிச்சையில் வியர்வை முழுவதும் வெளியேற 10 முதல் 15 நிமிடம் வரை போதுமானதாக உள்ளது.
இதுபோல் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சிகிச்சை பெறுவதன் மூலம் முற்றிலுமாக அந்த தோல் நோய்களிலிருந்து எவ்வித பக்க விளைவுகளும் இன்றி குணமடைய முடியும். அந்த ஆளுயர குழிக்குள்ளும் சில மூலிகைகளை பரப்பி வைக்கப் படுகிறது. இது ஸ்கின் டீடாக்ஸ் என்ற முறையில் செயல்படுகிறது.
சித்தா ஸ்கின் கேர் சென்டர் தலைமை மருத்துவர் டாக்டர் மாரிராஜ் அவர்களின் ஆலோசனையின் பேரில் சிறந்த மேற்பார்வையில் இந்த மருத்துவம் வழங்கப்படுகிறது. மூலிகைப் புகை சிகிச்சைக்குப் பிறகு மூலிகை எண்ணெய்கள் உள் மருந்தாக குடிக்க வழங்கப்படுகிறது.